states

img

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரே தியாகி அல்ல.... பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் இழிவான பேச்சு...

போபால்:
2008- ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று,மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது, அவர்களோடு எதிர்த்து சண்டையிட்டு தனது உயிரை இழந்தவர் ஹேமந்த் கார்கரே. மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படையின் தலைவராக துணிச்சலுடன் செயல்பட்டு வந்தவர். அவரின் தியாகத்தை மதித்து, இந்திய அரசு மிக உயர்ந்த ‘அசோக் சக்ரா’ விருதை வழங்கிகவுரவித்தது.

இந்நிலையில், ‘கார்கரே ஒன்றும்தியாகி அல்ல!’ என்று, பெண் சாமியாரிணியும், போபால் தொகுதி பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.1975-இல் நாட்டில் அமல்படுத்தப் பட்ட அவசர நிலை பிரகடனத்தின் 46-ஆவது ஆண்டையொட்டி, ம.பி. மாநிலம் செஹோரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்தான் இவ்வாறு அவர்பேசியுள்ளார்.“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நான் கைது செய்யப்பட்ட போது, தனிப்பட்ட முறையில் அதனை 1975-ஆம் ஆண்டின் எமர்ஜென்சி காலத்தைப் போல் உணர்ந்தேன். சிலர் ஹேமந்த்கார்கரேவை ஒரு தியாகி என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையான தேசபக்தர் அவ்வாறு நினைக்கமாட்டார். ஹேமந்த் கார்கரே 8-ஆம் வகுப்பு பயிலும்போதே ஆசிரியரின் கையை முறித்தவர். என்னையும் போலி ஆதாரங்களின் பேரில் சிறையில் தள்ளினார். இது ஜனநாயகமா?” என்று பிரக்யா சிங் தாக்குர்கொதித்துள்ளார்.

இதற்கு முன்பு 2019 ஏப்ரலிலும்இதேபோல பிரக்யா சிங் பேசியிருந்தார். “மாலேகான் வழக்கால், நான் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன்;அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்; அதனால் நான் அவரைச் சபித்தேன்; அவருடைய குடும்பமே அழிந்து போக வேண்டும் என்று சபித்தேன்; என் சாபம் பலித்தது; அவருடைய கர்மவினையால் அந்த வருடமே அவர் கொல்லப்பட்டார்” என்று கூறியிருந்தார். தற்போது மீண்டும் கார்கரேவின் தியாகத்தை அவமதித்துள்ளார்.
இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி மட்டுமே பேசப்பட்டுவந்த நேரத்தில், 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பை; (இதில் 6 பேர்பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்) இது இந்துத்துவாபயங்கரவாதிகளின் சதிவேலை என்றுபுலனாய்வு செய்து கண்டுபிடித்தவர் தான் ஹேமந்த் கார்கரே. அப்போது அவர் கைது செய்த பயங்கரவாதக் குற்றவாளிகள் 11 பேரில் பிரக்யா சிங் தாக்கூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;